சினிமா செய்திகள்

சசிகுமாருடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்தார் நிக்கி கல்ரானி!

Published

on

லாரன்ஸ், ஜி.வி. பிரகாஷ், பிரபுதேவா, விஷ்ணு விஷால் என பல நடிகர்களுடன் நடித்து வந்த நடிகை நிக்கி கல்ரானி முதன்முறையாக நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். காமெடி நடிகர் சதிஷும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

சென்னையில், இன்று எளிய முறையில் படத்தின் பூஜை நடைபெற்றது.

சுந்தர்.சி –யின் உதவி இயக்குநர் கதிர் இயக்கும் புதிய படத்தை டிடி ராஜா தயாரிக்கிறார். சசிகுமாரின் 19வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார்.

பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள சசிகுமார், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுடன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், அசுரவதம் படத்திற்கு பிறகு புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். சார்லி சாப்ளின் படத்திற்கு பிறகு இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை நிக்கி கல்ரானி.

seithichurul

Trending

Exit mobile version