சினிமா செய்திகள்
எதிர்பார்த்த வரவேற்பு இல்லை: ‘மாஸ்டர் செஃப்’ எடுத்த அதிரடி முடிவு!
சன் டிவியில் மிகவும் பிரமாண்டமாக சமீபத்தில் தொடங்கிய சமையல் நிகழ்ச்சி ‘மாஸ்டர் செஃப்’. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்கள் உள்ளனர் என்பதும் 12 பேரும் 12 துறைகளில் கைதேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் போட்டியாளர்களூக்கு கொடுக்கப்படும் டாஸ்குகளும் வித்தியாசமாக இருந்தது என்பது தெரிந்ததே.
அமெரிக்கா உள்பட பல நாடுகளில் மிகப் பெரிய ஹிட்டான இந்த நிகழ்ச்சி தமிழில் முதல்முறையாக பிரமாண்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமையல் கலை வல்லுனர்கள் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தினாலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை என்பதே உண்மையாக உள்ளது. இதை விட பல மடங்கு குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பில் பாதிகூட இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
குக் வித் கோமாளி என்றாலே சமையல் நிகழ்ச்சி என்பதையும் தாண்டி கோமாளிகளின் சேட்டைகள் மற்றும் காமெடிகள் அந்த நிகழ்ச்சியை மிகப்பெரிய வெற்றி அடைய செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மாஸ்டர் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி முழுக்க முழுக்க சீரியசாக உள்ளதால் சமையலிலும் தேர்ந்தவர்கள் மட்டுமே இதனை ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சிக்குழுவினர் தற்போது பிரபல நடிகை நிக்கி கல்ரானியை இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு செய்துள்ளனர். அவரது வருகை இந்த நிகழ்ச்சியை பிரபலமாக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.