வணிகம்

விளையாடும் போது ‘ஷூ’ கிழிந்தது; ரூ.10,000 கோடி ரூபாய் இழந்த நைக்!

Published

on

அமெரிக்காவின் டியூக் மற்றும் வடக்குக் காலிபோர்னியா பல்கலைக்கழகங்களுக்கு இடையிலா கூடைப் பந்துப் போட்டியில் விளையாடும் போது வீரரின் புதிய நைக் ஷூ கிழிந்து கீழே விழுந்ததால் ஆட்டம் தடையுற்றது..

இதை அறிந்த பிற விளையாட்டு வீரர்கள் தங்கள் நைக் நிறுவனம் மீதான தங்களது அதிருபியை சமுக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் அவர் அணிந்திருந்த நைக் ஷூ கிழிந்தது தான் என்று ஊடகங்களில் செய்தி வெளியாக ஒரே நாளில் நைக் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 1.46 பில்லியன் டாலர் சரிந்தது.

அது மட்டும் இல்லாமல் இந்த ஷூவின் ஆன்லைன் ரேட்டிங்கும் 5-ல் இருந்து 4 ஆகக் குறைந்துள்ளது.

இந்தப் பல்கலைக்கழக வீரர்களுக்கு12 ஆண்டுகளுக்கு விளையாட்டுச் சாதனங்கள், ஷூ, ஆடைகள் போன்றவற்றுக்கான ஆர்டரை நைக் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version