இந்தியா

பார்கள், ஓட்டல்கள் 7 நாட்கள் மூடப்படும், இரவு நேர ஊரடங்கு: எந்த நகரத்தில் தெரியுமா?

Published

on

பார்கள் ஹோட்டல்கள் உணவகங்கள் ஏழு நாட்கள் மூடப்படும் என்றும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 மணி நேரம் இரவு நேர ஊரடங்கு என்றும் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள புனே நகரின் ஆணையர் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் அங்கு உள்ள முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு பல மடங்கு அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இன்று முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுகாதார அமைச்சக அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் எடுத்த முடிவின் படி, புனே மாவட்டத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு பார்கள் மற்றும் உணவுகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு என்றும், ஊரடங்கு நேரத்தில் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உணவகங்களில் பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் இறுதிச் சடங்குகள் மற்றும் திருமணங்களை தவிர வேறு எந்த நிகழ்ச்சியும் அனுமதிக்க படாது என்றும் அதிலும் இறுதி சடங்குகள் 20 பேர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் திருமணங்களில் 50 பேர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் என்றும் இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது/ இதனால் புனே நகரில் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending

Exit mobile version