சினிமா செய்திகள்

முன்கூட்டியே ரிலீசான சூர்யாவின் என்.ஜி.கே டீஸர்!

Published

on

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் செல்வராகவன் காம்போவில் உருவாகியுள்ள என்.ஜி.கே எனும் நந்த கோபாலன் குமரன் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

காதலர் தினமான இன்று சூர்யாவின் தம்பி கார்த்தியின் தேவ் படம் ரிலீசானது. தேவ் படத்துடன் என்.ஜி.கே டீஸர் தியேட்டர்களில் வெளியானது. மேலும், படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் என ட்ரீம் வாரியர்ஸ் அறிவித்திருந்தது.

ஆனால், தியேட்டரில் இருந்து வீடியோவை காப்பி செய்து விஷமிகள் லீக் செய்யக் கூடும் என்பதால், படத்தின் டீஸரை காலை 10.30 மணிக்கே நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்தை தொடர்ந்து இந்த படத்தில் தர லோக்கல் அரசியலை செல்வராகவன் கையில் எடுத்துள்ளார்.

அதிலும், அந்த ரத்தம் தெறிக்கும் கை சீன் செம மாஸ்.

Trending

Exit mobile version