இந்தியா

2022ல் சென்னையில் 5ஜி சேவை ஆரம்பமா?

Published

on

சென்னை உள்பட ஒரு சில முக்கிய நகரங்களில் 2022ஆம் ஆண்டு 5ஜி சேவை ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் செல்போன் அறிமுகமான காலத்தில் 2ஜி சேவை மட்டுமே இருந்த நிலையில் 2000ஆம் ஆண்டு 3ஜி சேவை கண்டுபிடிக்கப்பட்டு அந்த தொழில்நுட்பம் பயனாளர்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது 4ஜி சேவை இருந்துவரும் நிலையில் அடுத்ததாக விரைவாக செயல்படும் 5ஜி சேவை அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்கட்டமாக சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, லக்னோ, ஐதராபாத், புனே, காந்திநகர், ஜாம்நகர், சண்டிகர், குருகிராம் ஆகிய பகுதிகளில் 2022ஆம் ஆண்டு 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சேவை குறித்து ஐஐடி நிறுவனங்களுடன் மத்திய தொலைதொடர்பு துறை ஆய்வில் ஈடுபட்டு வருவதாகவும், பரிசோதனை முறையில் நடைபெற்று வரும் இந்த ஆய்வுக்காக 224 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வுகள் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்தது விடும் என்பதால் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் முதல் 5ஜி சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜி சேவை என்பது மிகவும் வேகமான இன்டர்நெட் சேவை என்பதால் விரைவாக ஒரு பைலை டவுண்லோட் மற்றும் அப்லோட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மூன்று மணி நேரம் உள்ள ஒரு முழு திரைப்படத்தை ஒரு சில வினாடிகளில் டவுன்லோட் செய்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வந்தவுடன் இந்தியாவில் தொழில்நுட்பத்துறை அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version