தமிழ்நாடு

ஜூலையில் குடியரசு தலைவர் தேர்தல்: முக ஸ்டாலின் ஆதரவுடன் தமிழர் போட்டியா?

Published

on

வரும் ஜூலை மாதம் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆதரவு பெற்ற தமிழர் ஒருவர் போட்டியிடுவார் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என்பது தெரிந்ததே. கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வெற்றி பெற்றார் என்பதும் அவருடைய பதவிக்காலம் வரும் ஜூலை உடன் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலையில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த வேட்பாளர் ஒரு தமிழராக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அனைத்து கட்சி தலைவர்களிடமும் கூடிப்பேசி தமிழர் ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றும் தமிழர் ஒருவர் குடியரசுத் தலைவராக இருந்தால் தான் நீட்தேர்வு உள்பட தமிழ்நாட்டின் மசோதாக்கள் நிறைவேறுவதற்கு எந்தவித இடைஞ்சலும் இருக்காது என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் புதிய குடியரசுத் தலைவர் தேர்வில் தமிழக முதல்வரின் பணி எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version