தமிழ்நாடு

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை, சென்னையில் என்ன நிலவரம்: வானிலை ஆய்வு மையம்!

Published

on

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் ஆரம்பித்து விட்டது என்பதும் இயல்பை விட 3 டிகிரி அதிகமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் வெப்பம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது

இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு முன் மாநிலத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 2ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் குமரி நெல்லை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்றாலும் ஒரு சில இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 

Trending

Exit mobile version