உலகம்

கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே நாளில் 10 டோஸ் போட்ட நபர்: அதிர்ச்சியில் மருத்துவர்

Published

on

கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே நாளில் 10 தடுப்பூசிகள் போட்ட ஒரு நபரால் மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வந்ததை அடுத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்படி இருந்தும் பலர் கொரோனா தடுப்பூசி செலுத்த வராததை அடுத்து சலுகைகளும் பரிசுகளும் அறிவிக்கப்பட்டது என்பதும் ஒரு சில இடங்களில் பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் அனுமதிக்க மாட்டார்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நியூசிலாந்து நாட்டில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக 10 முறை தடுப்பூசி ஒருவர் ஆர்வக்கோளாறில் செலுத்தி கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் அவர் ஒரே நாளில் 10 தடுப்பூசி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விசாரணை நடத்த நியூசிலாந்து அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் ஒரே நேரத்தில் 10 தடுப்பூசி செலுத்தியவர் நபர் குறித்த விபரத்தை நியூசிலாந்து அரசு வெளியிடவில்லை. ஆனால் அதே நேரத்தில் சரியான டேட்டாக்களை பரிசோதனை செய்யாமல் அந்த நபருக்கு எப்படி 10 டோஸ் செலுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version