கிரிக்கெட்

38 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்கள்: இன்னிங்ஸ் தோல்வி அடையுமா நியூசிலாந்து?

Published

on

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 38 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் நேற்று முதல் தொடங்கி உள்ள 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது என்பதும் இந்தியாவின் மயங்க் அகர்வால் மிக அபாரமாக விளையாடி 150 ரன்கள் அடித்தார் என்பதும் இதன் காரணமாக இந்தியாவின் ஸ்கோர் 325 என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட்டுக்கு 38 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான டாம் லாதம் மட்டுமே 10 ரன்கள் எடுத்துள்ளார் என்பது மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சிராஜ் மிக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பதும் அக்சர் பட்டேல், அஸ்வின் மற்றும் ஜெயந்த் யாதவ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணி தற்போது 287 ரன்கள் பின்தங்கிய நிலையில் அந்த அணி ஃபாலோ ஆன் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இரண்டாவது இன்னிங்சிலும் இந்தியாவின் பந்து வீச்சு அபாரமாக இருந்தால் நியூசிலாந்து இன்னிங்ஸ் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version