கிரிக்கெட்

349 ரன்கள் எடுத்தும் இந்தியாவை கதறவிட்ட பிரேஸ்வெல் .. நூலிழையில் வெற்றியை தவறவிட்ட நியூசிலாந்து!

Published

on

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் சூப்பராக விளையாடி இரட்டை சதம் அடித்தார் என்பதும் அவர் 149 பந்துகளில் 19 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் இதுவரை இரட்டைச் சதம் அடித்த வீரர்கள் 5 பேர்கள் மட்டுமே என்ற நிலையில் இந்த பட்டியில் ஆறாவதாக சுப்மன் கில் இணைந்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது.

இந்த நிலையில் இந்தியாவின் ஸ்கோர் 349 என்ற நிலையில் கண்டிப்பாக இந்தியா மிகப் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இந்தியாவின் தரப்பில் அபாரமாக பந்து வீசக்கூடிய சிராஜ், ஷமி, குல்திப் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் என 4 பந்துவீச்சாளர்கள் இருந்ததே இதற்கு காரணம்.

அதேபோல் ஆரம்பத்தில் நியூசிலாந்து விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. ஆனால் ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் மிக அபாரமாக விளையாடிய இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருந்தார். அவர் 78 பந்துகளில் 140 ரன்கள் எடுத்தார் என்பதும் அதில் 10 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் கடைசி ஓவரில் ஆறு பந்துகளில் நியூசிலாந்து எடுக்க வேண்டிய ரன்கள் 20 ரன்கள் என்ற நிலையில் பிரேஸ்வெல் நல்ல ஃபார்மில் இருந்ததால் கண்டிப்பாக அவர் நியூசிலாந்தை வெற்றி பெற செய்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

20வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசிய நிலையில் முதல் பந்திலையை பிரேஸ்வெல் சிக்சர் அடித்து இந்திய பந்துவீச்சாளர்களை கதறவிட்டாr. இதனால் 5 பந்துகளில் 14 ரன்கள் என்பது மிக எளிதாக எடுக்க கூடிய இலக்காக நியூசிலாந்து அணிக்கு மாறியது. இந்த நிலையில் இரண்டாவது பந்தில் அவர் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்ததால் ஏற்கனவே 9 விக்கெட்டுக்களை இழந்திருந்த நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது. இந்திய அணி இந்த போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியை கதறவிட்டு 350 என்ற இலக்கை நெருக்கி கொண்டு வந்த பிரேஸ்வெல் மிக அபாரமாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்தியாவின் இரட்டைச் சதம் அடித்த சுப்மன்கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

Trending

Exit mobile version