உலகம்

இந்தியா வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு!

Published

on

இந்தியாவில் கொரனோ வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது என்பதும் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

அமெரிக்கா பிரேசிலை அடுத்து உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நாடாக இருக்கும் இந்தியா வெகுவிரைவில் பிரேசிலை முந்தி இரண்டாம் இடத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து கொரனோ வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது என்பதும் இன்று 12 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்யும் பிரதமர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் தகுந்த முறையில் சோதனை செய்யப்படுவார்கள் என ஏற்கனவே ஒரு சில நாடுகள் அறிவித்துள்ள நிலையில் தற்போது நியூசிலாந்து நாடு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரனோ அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு தடை விதிப்பதாக நியூசிலாந்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை தடை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு பின்னர் நிலைமையை பொறுத்து இந்த் தடை நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் இருந்து நியூஸிலாந்து செல்லும் பயணிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version