உலகம்

பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொண்டால் ரூ.7500 பரிசு: அதிரடி அறிவிப்பு!

Published

on

ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்தும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூபாய் 7500 பரிசு தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு இந்தியாவில் இல்லை என்பதும் அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா, அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளில் தற்போது ஒமிக்ரான் மிக மிக வேகமாக பரவி வருவதால் அனைத்து நாட்டு அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு டோஸ் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி இருந்தாலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ஒமிக்ரான் வைரஸில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அமெரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்தும் பூஸ்டர் தடுப்பு ஊசியை செலுத்தி கொள்பவர்களுக்கு 100 டாலர் பணம் பரிசு வழங்கப்படும் என நியூயார்க் மேயர் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் 100 டாலர் என்பது நம் ஊர் பணத்தில் ரூபாய் 7500 என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் உள்ள பெரும்பாலானோர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி விட்டதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் இல்லாமல் இருப்பதை அடுத்தே இந்த பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களுக்கும் 100 டாலர் பரிசு பணம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பூஸ்டர் தடுப்பூசி ஒன்றே பொது மக்களை காக்கும் வழி என்பதை அடுத்து பணம் கொடுத்தாவது மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று நியூயார்க் மேயர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version