உலகம்

அமெரிக்கா: புதிதாக பதவியேற்க இருந்த எம்பி கொரோனாவுக்கு பலி!

Published

on

சமீபத்தில் அமெரிக்க எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட லூக் லெட்லோ, கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தார்.

அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில், லூசியானா மாகாணத்தில் குடியரசு கட்சி சார்பில் லூக் லெட்லோ தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வரும் ஜனவரி 3 ஆம் தேதி பதவியேற்பதாக இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக,  மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.  லூக் லெட்லோவின் உடலை மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். லூக் லெட்லோ மறைவுக்கு லூசியானா மாகாண கவர்னர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் மற்றும் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெல்லோசி ஆகியோர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து உள்ளனர்.

கவர்னர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் இரங்கல் கடிதத்தில், “லூக் லெட்லோ அவரது சிறு வயது முதலே தனது மாகாண மக்களுக்காக சேவை செய்து வந்தவர்” எனக் கூறினார். லூக் லெட்லோ பொது சேவைக்காகத் தனது வாழ்நாளை அர்பணித்தவர், அவரது மறைவு அனைவருக்கும் துயரத்தை ஏற்படுத்துகிறது என சபா நாயகர் நான்சி பெல்லோசி இரங்கல் கடிதத்தில் தெரிவித்தார

seithichurul

Trending

Exit mobile version