Connect with us

கிரிக்கெட்

இந்தியா 92 ரன்னில் ஆல் அவுட்: நியூசிலாந்து அபார வெற்றி!

Published

on

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டி ஹமில்டனில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 92 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டி தொடர்களில் விளையாட உள்ளது. அதில் முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் அபாரமாக விளையாடி வெற்றிபெற்றுள்ள இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் நான்காவது ஒருநாள் போட்டி இன்று நடந்தது.

இதில் கேப்டன் கோலி, தோனி மற்றும் முகாமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. இதில் ரோஹித் ஷர்மாவுக்கு 200-வது ஒருநாள் போட்டி ஆகும். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங்கை ஆரம்பித்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஏமாற்றம் அளிக்க வரிசையாக ஒட்டுமொத்த அணியும் சொற்ப ரன்னில் வெளியேறியது. நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் இந்திய அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி நிலைகுலைய வைத்தார்.

இந்திய அணியில் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. ரோஹித் ஷர்மா 7, தவான் 13, ஷுப்மன் கில் 9, ராயுடு 0, தினேஷ் கார்த்திக் 0, ஜாதவ் 1, பாண்டியா 16, புவனேஸ்வார் குமார் 1, குல்தீப் யாதவ் 15, அஹமது 5 ரன் என வரிசையாக பெவிலியன் திரும்பினர். சாஹல் மட்டும் 18 ரன்களுடன் களத்தில் நின்றார். இந்திய அணி 30.5 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும், கிராண்ட்ஹோம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் டெய்லர் 37 ரன்களையும், நிக்கோல்ஸ் 30 ரன்களையும் எடுத்தனர். இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை நிலைகுலைய செய்த ட்ரெண்ட் போல்ட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!