கிரிக்கெட்

நியூசிலாந்தை தோற்கடித்த ஐசிசியின் விதி: அது விதியல்ல சதி என சாடும் முன்னாள் வீரர்கள்!

Published

on

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று உலகக் கோப்பையை முதன் முறையாக கைப்பற்றியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோற்கவும் இல்லை, இங்கிலாந்து அணி வெற்றி பெறவும் இல்லை. ஆனால் கோப்பையை மட்டும் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி. இதற்கு காரணமான ஐசிசியின் சர்ச்சைக்குறிய விதியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

முதலில் நடந்த ஐம்பது ஓவர் போட்டி சமனில் முடிய, வெற்றி தோல்வியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க எந்த அணி அதிக பவுண்டரிகளை அடித்ததோ அந்த அணிக்கு வெற்றி அறிவிக்கப்படும் என்ற சூப்பர் ஓவர் விதி நியூசிலாந்து அணியின் வெற்றியை பறித்து, கோப்பையை இங்கிலாந்துக்கு கொடுத்துவிட்டது.

இந்நிலையில் சூப்பர் ஓவர் விதிமுறையானது அதிரடி பேட்டிங்குக்குச் சாதகமாக வகுக்கப்பட்டது ஏன்? என சர்ச்சையை கிளப்பியுள்ளது. பந்துவீச்சில் அதிக விக்கெட்டை வீழ்த்திய அணிக்கு வெற்றியை வழங்கியிருக்கலாமே? நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. ஆனால் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப், தீடீர் மரணம் ஏற்படுவது போல, சூப்பர் ஓவரின் இந்த பவுண்டரி விதிமுறையை ஜீரணிக்கவே முடியவில்லை. இன்னொரு சூப்பர் ஓவர் நடத்தி கூட வெற்றியைத் தீர்மானித்திருக்கலாம். வெற்றி ஒருவருக்குத்தான் என்பதை ஏற்கிறேன், ஆனால் பவுண்டரியை வைத்து வெற்றி நிர்ணயிக்கப்பட்டதற்குப் பதிலாக கோப்பையை இருவருக்கும் பகிர்ந்தளித்திருக்கலாம் என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

கவுதம் கம்பீர், உலகக் கோப்பையை வெல்வது அதிக பவுண்டரிகளை அடித்த அணிதான் என்ற இந்த முடிவைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது கேலிக்குரிய விதியாகும். என்னைப் பொறுத்தவரையில் இருவரும் வெற்றியாளர்கள்தான் என கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு வாழ்த்துகள்! நியூசிலாந்துக்கு வருத்தங்கள்! இந்த விதிமுறை மிக பயங்கரமாக உள்ளது. இதை மாற்ற வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிரட் லீ தனது ட்விட்டர் தெரிவித்துள்ளார். அதேப்போல நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ஃபிளமிங், இது ஒரு கொடூரமான முடிவு என்று தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version