உலகம்

போலியான போட்டோஷாப் பதிவு: பிரதமர் மோடி செய்திக்கு நியூயார்க் டைம்ஸ் விளக்கம்!

Published

on

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியை பிரபல அமெரிக்க இதழான தி நியூயார்க் டைம்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஐநா சபை கூட்டம் மற்றும் குவாட் உச்சிமாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது உலகின் இறுதி மற்றும் கடைசி நம்பிக்கை என தலைப்பிடப்பட்ட பிரதமர் மோடியின் புகைப்படம் அடங்கிய செய்தியை வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.

இந்த செய்தி வெளியானதுமே பலரும் இதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கினர். செப்டம்பர் 26, 2021 தேதியிட்ட பரப்பப்பட்ட புகைப்படத்தை ஆங்கிலத்தில் செப்டம்பர் என்ற வார்த்தையில் இருந்த எழுத்துப் பிழைகளையும் பலரும் சுட்டிக் காட்டியிருந்தனர்.

மேலும் அன்றைய தினம் வெளியான ’தி நியூயார்க் டைம்ஸ்’ இதழின் உண்மையான முகப்பு பக்கத்தை பதிவிட்டு பொய்யாக வெளியிடப்பட்ட செய்திக்கு ’தி நியூயார்க் டைம்ஸ்’ மறுப்பு தெரிவித்தது. செப்டம்பர் 26ஆம் தேதி பிரதமர் மோடி குறித்து ’தி நியூயார்க் டைம்ஸ்’ இதழின் முகப்பு பக்கத்தில் எந்தவிதமான செய்தியும் வெளியாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவை இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு விவாதம் ஆனது.

இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ’தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில், ‘புனையப்பட்ட, ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட நியூயார்க் டைம்ஸ் பெயர் கொண்ட புகைப்படமானது அதிகமாக இணையத்தில் பரவி வருவதாகவும், இது உண்மையானது அல்ல என்று மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் குறித்து சர்வதேச இதழின் முகப்பு பக்கத்தில் வெளியானதாக பகிரப்பட்ட தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version