தமிழ்நாடு

புத்தாண்டு அன்று கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு

Published

on

புத்தாண்டு அன்று சென்னை மெரினா கடற்கரை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என சற்று முன் தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தாலும் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் என்று மருத்துவ நிபுணர்கள், மருத்துவத் துறை செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருடன் ஆலோசனை செய்தார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் புத்தாண்டு அன்று கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாட்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக தமிழகத்தில் உள்ள மெரினா கடற்கரை உலகின் கடற்கரை எங்கும் செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version