உலகம்

ஒமிக்ரானைவிட அபாயகரமான புதிய வைரஸ் கண்டுபிடிப்பு: மனித குலத்திற்கே அழிவா?

Published

on

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பரவி கோடிக் கணக்கானவர்களை பாதித்தது என்பதும் அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு இரண்டாவது அலை தோன்றி மிகப்பெரிய உயிரிழப்புக்கள் மற்றும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது 2022ஆம் ஆண்டில் ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதும் இந்த வைரஸ் கொரோனா வைரஸை விட பல மடங்கு ஆபத்தானது என விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் எச்சரித்து உள்ளதால் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது என்பதும் பல நாடுகள் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஒமிக்ரானை விட அபாயகரமான வைரஸ் பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு பயணம் செல்ல இருந்த பயணிகள் 12 பேருக்கு புதிய வகை வைரஸ் பரவி உள்ளதாகவும், இந்த வைரஸ் ஒமிக்ரானைவிட மோசமான வைரஸ் ஆக இருக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புது புது வகையான வைரஸ்கள் தோன்றி மனித குலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் புதிதாக ஒமிக்ரானை விட மோசமான ஒரு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மனித குலத்திற்கே அழிவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version