இந்தியா

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் புதிய மாற்றங்கள்.. மத்திய அரசு அதிரடி!

Published

on

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் கட்டாயமாக பாலிசியை பெற வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இயற்கை சீற்றங்களால் விளை பயிர்கள் சேதம் அடையும் போது, விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசால் பயிர் காப்பீட்டுத் திட்டம் 2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.

தற்போது அந்த பயிர் காப்பீட்டு திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து இந்திய பிரதம மந்திரி பயிர் காப்பிட்டு திட்டம் என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மாற்றங்களின் படி வங்கிகளில் கடன் பெற்று விவசாயம் செய்யும் போது கண்டிப்பாகப் பயிர் காப்பீடு பெற வேண்டும் என்று இருந்ததை நீக்கி, விவசாயிகளுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட வாரியாகவும், சராசரி மகசூலின் அடிப்படையிலும் காப்பிட்டுத் தொகையை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஜூலை 31-ம் தேதிக்குள் தங்களது பயிர்களைக் காப்பிடு செய்ய வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு 651 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version