உலகம்

உயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய பூஞ்சை: பொதுமக்கள் அதிர்ச்சி

Published

on

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே ஆட்டி வைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் அலை, இரண்டாவது அலை, முடிவடைந்து தற்போது உலகில் பல நாடுகளில் மூன்றாவது அலையும் ஒரு சில நாடுகளில் நான்காவது அலையும் தோன்றி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் வேகமாக பரவி வரும் நிலையில் இன்னொரு பக்கம் பூஞ்சைகள் பரவி வருகின்றன விதவிதமான பூஞ்சைகள் பரவி மனித இனத்தை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது உயிரை உயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய வகை பூஞ்சை அமெரிக்காவில் பரவி இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்க சுகாதார துறை அதிகாரிகள் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் இந்த பூஞ்சை அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் மற்றும் வாஷிங்டன் ஆகிய பகுதிகளில் பரவி வருவதாகவும் ஒரு சில உயிரிழப்புகளையும் இந்த பூஞ்சைகள் ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேண்டிடா ஆரிஸ் என்று கூறப்படும் இந்த பூஞ்சை நோய் குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் ஆய்வு செய்து வருகின்றன. காய்ச்சல் மற்றும் குளிர் ஆகியவை இந்த பூஞ்சை நோய் தொற்றுக்கான பொதுவான அறிகுறி தோன்றும் இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று இந்த பூஞ்சைகள் தாக்கி இருக்கிறதா என்பதை சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேண்டிடா ஆரிஸ் என்ற இந்த பூஞ்சை தொற்று ரத்த ஓட்டத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்தக்கூடிய வீரியத்தை பெற்றதாகும் என்று அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version