தமிழ்நாடு

பொறுமை காத்த பீட்டர் அல்போன்ஸ்.. பதவியை தட்டி சென்ற கே.எஸ் அழகிரி

Published

on

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிற்கு பீட்டர் அல்போன்சிற்கு பதிலாக கே.எஸ் அழகிரி நியமிக்கப்பட்டு இருப்பது சில காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

நேற்று இரவு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக பலரால் எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் என்று கூட அதை கூறலாம்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய செயல் தலைவர்களும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழக காங்கிரஸ் பதவிக்கு திருநாவுக்கரசருக்கு பதிலாக பீட்டர் அல்போன்ஸ் தலைவர் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரே சிலர் கடந்த சில நாட்களாக பேசி வந்தனர். வெளிப்படையாக பீட்டர் அல்போன்ஸ்தான் தலைவராக போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தது.

காங்கிரஸ் திமுக கூட்டணி குறித்தும் திருநாவுக்கரசருக்கு பதிலாக பீட்டர் அல்போன்ஸ்தான் பேட்டி அளித்து வந்தார். தமிழக காங்கிரஸ் கட்சியில் திருநாவுக்கரசரை விட பீட்டர் அல்போன்ஸ் அதிகம் முன்னிறுத்தப்பட்டார். அதேபோல் ராகுல் காந்தி தமிழகம் வந்த போது கூட பீட்டர் அல்போன்சிடம் தனியாக நீண்ட நேரம் உரையாடினார்.

seithichurul

Trending

Exit mobile version