இந்தியா

இந்தியாவில் கிடுகிடுவென பரவும் புதுவகை கொரோனா; அதிவேக தொற்றாக மாறும் அபாயம் – எய்ம்ஸ் எச்சரிக்கை

Published

on

இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக புதுவகை கொரோனா வைரஸ் தொற்று கிடு கிடுவென பரவி வருகிறது. இந்த புதுவகை தொற்று முன்பை இருந்த கொரோனா தொற்றை விட மிக அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ரந்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவின் புதிய வகை, தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று, நாட்டில் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் அது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவைத் தவிர கேரளா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் இந்தப் புதிய வகை கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக நாட்டில் இரு வகைத் தடுப்பூசி மருந்துகள் முன்களப் பணியாளர்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் மொத்தம் உள்ள 3 கோடி முன்களப் பணியாளர்களில் சுமார் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றும், அடுத்து தடுப்பூசி அதிகம் தேவைப்படும் 27 கோடி பேருக்கு கொடுக்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி, புதிய வகை கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் திறனுடையதா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.

இப்படியான சூழலில் தான் மருத்துவர் குலேரியா, ‘நம் நாட்டில் பொதுவாக கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் திறன் மொத்த மக்கள் தொகைக்கும் வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதில் உண்மையில்லை. புதுவகை கொரோனா மிகவும் அபாயகரமானது மற்றும் அதிகமாக பரவக்கூடியது. இதற்கு முன்னால் கொரோனா தொற்றால் அவதிப்பட்டவர்களுக்கும் இந்த புதுவகை கொரோனா மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தலாம்’ என்கிறார்.

புதுவகைத் தொற்றால், மீண்டும் நாட்டில் அதிக பரிசோதனைகள், பாதிப்பு இருப்பரைத் தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற நடவடிக்கைகளில் அரசுகள் துரிதப்படுத்த வேண்டி வரலாம் எனப்படுகிறது.

 

Trending

Exit mobile version