சினிமா செய்திகள்

கோமாளி படத்தின் புதிய பாடல் வெளியீடு!

Published

on

ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து நாளை திரைக்கு வரவுள்ள படம் தான் கோமாளி. இந்த படத்திற்கு ரஜினி ரசிகர்கள் உருவாக்கிய பல சர்ச்சைகள், தடைகளையும் தாண்டி படம் நாளை வெளியாகிறது.

காஜல் அகர்வால், சம்யூக்தா, யோகி பாபு, கே. எஸ். ரவி குமார், ஷாரா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் நண்பா நண்பா பாடல் இன்று வெளியாகியுள்ளது.

சாதி, மதம் பார்க்காமல் ஆபத்தின் போது அனைவரும் நண்பர்கள் என்ற உணர்வை இந்த பாடலின் லிரிக் வீடியோ மூலம் அருமையாக உணர்த்துகிறது.

Trending

Exit mobile version