தமிழ்நாடு

ரேஷன் கடையில் கைவிரல் ரேகை பிரச்சினைக்குத் தீர்வு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

Published

on

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கீழ், கைவிரல் ரேகை உள்ளிட்டு ரேஷன் பொருட்களை வழங்க முடியவில்லை என்றால், மற்ற வழி முறைகளைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்கள் வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கைவிரல் ரேகை பயன்படுத்தி ரேஷ்ன் பொருட்கள் விநியோகிக்கும் முறையை நாடு முழுவதும் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. ஆனால் கைவிரல் ரேகை பல இடங்களில் ஒழுங்காக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வைகையில், ரேஷன் கடை ஊழியர்களுக்குச் சுற்று அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதன் படி ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கீழ், கைவிரல் ரேகை உள்ளிட்டு ரேஷன் பொருட்களை வழங்க முடியவில்லை என்றால், மாற்று வழிகளான 1) ஆதார் மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் அனுப்பும் முறை, 2) ஆதார் கார்டு ஸ்கான் செய்து பதிவேற்றும் முறை, 3) ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் அனுப்பும் முறை, 4) மின்னணு ரேஷன் அட்டையை ஸ்கான் செய்யும் முறை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றி ரேஷன் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கைவிரல் ரேகை செயல்படவில்லை என்ற காரணத்திற்காக யார்க்கும் ரேஷன் பொருட்கள் விநியோகிக்காமல் இருந்துவிடக் கூடாது. மாற்றும் வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி கட்டாயம் அரிசி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version