தமிழ்நாடு

மாணவர்களுக்கு புதிய திட்டம்: வீடுகளுக்கே சென்று உணவு வழங்க முடிவு!

Published

on

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதும் ஒவ்வொரு திட்டமும் பொதுமக்களால் வரவேற்கப்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது புதிதாக மாணவர்களுக்கு ஒரு திட்டம் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு மையங்களில் சமைக்கப்பட்டு மதிய உணவை அவர்களின் வீட்டுக்கே சென்று வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் குழந்தைகள் பள்ளிக்கு வர முடியவில்லை. இதனால் அவர்களுக்கு தேவையான சத்துணவு கிடைக்கவில்லை. இது குறித்த வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு 2 வயது முதல் 6 வயது உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு மையங்களில் உணவுகள் சமைக்கப்பட்டு மதிய உணவு அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய திட்டத்தை 15 நாட்களுக்குள் செயல்படுத்த உள்ளதாக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

மற்ற மாணவர்களைப் பொருத்தவரை செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து அந்தந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீண்டும் எப்படி அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version