இந்தியா

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய புதிய நடைமுறை: மத்திய அரசு

Published

on

இன்று மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவித்தது வருமான வரி கட்டுபவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும் வருமான வரி செலுத்துவதற்கு புதிய நடைமுறை அமல்படுத்தப் படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வருமான வரி தாக்கல் செய்யும் போது அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதை திருத்தம் செய்ய இரண்டு ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வருமான வரி தாக்கல் செய்பவர்கள் வருமான வரி கணக்கு தாக்கலில் தவறு இருந்தால் அதை திருத்தம் செய்யலாம் என்றும் இரண்டு ஆண்டுகள் வரை அதற்கு அவகாசம் தரப்படும் என்றும் புதிய நடைமுறையில் இந்த வசதி அமல்படுத்துவதாகவும் மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோருக்கும் திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகைகள் மார்ச் 2023 வரை நீடிக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டுறவு சங்கங்களுக்கு மாற்றுவரி 15% குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version