பர்சனல் ஃபினான்ஸ்

ஜனவரி 1-ம் தேதி முதல் ஏற்பட்டுள்ள இந்த 10 மாற்றங்கள் பற்றிக் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை!

Published

on

2021 ஜனவரி 1-ம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர், செக் பரிவர்த்தனை, யூபிஐ, கூகுள் பே, ஜிஎஸ்டி என 10 சேவைகளில் புதிய விதிகள் அமலுக்கு வந்துளன.

அப்படி ஜனவரி 1-ம் தேதி முதல் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

செக் பரிவர்த்தனை விதிகள்

காசோலை (செக்) பரிவர்த்தனை செய்யும் போது நிதி மோசடிகள் அதிகமாக நடைபெறுவதைத் தடுக்கும் நோக்கத்தில், 2021 ஜனவரி 1-ம் தேதி முதல் ‘பாசிட்டிவ் பே சிஸ்டம்’ என்ற புதிய முறையை ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது.

இதனால் ரூ.50,000-க்கும் அதிகமாக செக் பரிவர்தனை செய்தால், காசோலை வழங்கியவர், பரிவத்தனை தொடர்பான தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். பயனாளியின் பெயர், பணம் செலுத்துவோரின் பெயர், தொகை, செக் எண், தேதி உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். இந்த விவரங்களை செக் படிவத்தில் குறிப்பிடுவது மட்டும் அல்லாமல் எஸ்.எம்.எஸ், மொபைல் செயலி, இணையதள வங்கி சேவை, ஏடிஎம் போன்றவற்றின் வாயிலாக வழங்க வேண்டும்.

வாட்ஸ்ஆப் செயலி இந்த போனில் எல்லாம் வேலை செய்யாது?

ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலி, சில போன்களில் வேலை செய்யாது என்று அறிவித்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

ஆண்டிராய்டு இயங்குதளம் கொண்ட போன்களைப் பொறுத்தவரை ‘ஆண்டிராய்டு 4.0.3’ அல்லது அதற்குப் பின்னர் வந்த வெர்ஷன்களில் வாட்ஸ்அப் இயங்கும். அதே நேரத்தில் இதற்கு முன்னர் வந்த மென்பொருள் கொண்ட ஸ்மார்ட் போன்களில், 2021 ஆம் ஆண்டு, ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் செயல்படாது. ஐபோன்களைப் பொறுத்தவரையில், iOS 9 அல்லது அதற்குப் பின்னர் வந்த ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் எந்தவித சிக்கலும் இல்லாமல் இயங்கும். அதற்கு முன்னர் வந்த எவற்றிலும் இனி வாட்ஸ்அப் செயல்படாது. மேலும் படிக்க.

எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை

2021 ஜனவரி 1-ம் தேதி முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொருத்து, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் விலை மாற்றம் ஏற்படும். எனவே இனி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றமடையும்.

ஜிஎஸ்டி விற்பனை வரி தாக்கல்

2021 ஜனவரி 1-ம் தேதி முதல் 5 கோடி ரூபாய்க்கும் குறைவாக விற்றுமுதல் செய்யும் நிறுவனங்கள் ஆண்டுக்கு 4 முறை விற்பனை வரி தாக்கல் செய்தால் போதும். இப்போது 12 முறை செய்து வருகின்றனர். இதனால் 94 லட்சம் வரி செலுத்துவோர்கள் பயனடைவார்கள்.

டெபிட் கார்டுகள்

காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டு என்று அழைக்கப்படும், தொடர்பில்லா டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாகப் பரிவர்த்தனை செய்யும் வரம்பை 2 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக ஆர்பிஐ மாற்றியுள்ளது.

கார் விலை

தயாரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால், மாருதி சுசூகி மற்றும் மஹிந்தரா நிறுவனங்கள் தங்களது கார் விலையை ஜனவரி 1-ம் தேதி முதல் விலையை உயர்த்தியுள்ளன.

லேண்ட்லைன் டூ மொபைல் கால் அழைப்பு

லேண்ட்லைனில் இருந்து மொபைல் எண்ணிற்கு அழைத்தால் இன்று முதல், மொபைல் எண்ணின் முன்பு 0 என்ற எண்ணைச் சேர்க்க வேண்டும்.

4 சக்கர வாகனங்களுக்கான FASTag

ஜனவரி 2021 முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் FASTag கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கூடுதல் அவகாசமாக டிசம்பர் 2017-ம் ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வாகனங்களுக்கு ஜனவரி 15-ம் தேதி வரை FASTag பொருத்தக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

யூபிஐ பணம் பரிவர்த்தனை

கூகுள் பே, அமேசான் பே மற்றும் போன் பே உள்ளிட்ட யூபிஐ பணம் பரிவர்த்தனை செயலிகளில் பணம் அனுப்பினால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி அல்லாத பிற யூபிஐ பணம் பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணம் அனுப்ப 30% கட்டுப்பாட்டையும் தேசிய கொடுப்பனவுகள் நிறுவனம் விதித்துள்ளது. பேடிஎம் நிறுவனத்துக்கும் இந்த கட்டணம் பொருந்தும்.

கூகுள் பே இணையதள செயலி

கூகுள் பே இணையதளம் மூலம் பணம் பரிமாற்றும் செய்யும் சேவையை ஜனவரி 1 முதல் நிறுத்தியுள்ளது.

https://seithichurul.com/business/tv-refrigerator-washing-machines-price-are-expected-increase-upto-10-from-january/31538/

seithichurul

Trending

Exit mobile version