தமிழ்நாடு

கோவையில் நாளை முதல் மீண்டும் கட்டுப்பாடுகள்: கிட்டத்தட்ட முழுஊரடங்கு!

Published

on

கொரோனா வைரஸ் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள கோவையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, பால், மருந்த கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே கோவையில் செயல்படும் என்றும் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய தெருக்களில் உள்ள கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவையில் உள்ள உணவகங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே இயங்க வேண்டும் என்றும் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி என்றும் சிலர் சில்லரை வியாபாரத்திற்கு அனுமதி இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கோவையில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக ஆகம பூஜைகள் மட்டும் நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கோவை மாவட்டத்திற்குள் பிற மாநிலத்தில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே கோவை மாவட்டத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இல்லையெனில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுவரை கோவை எல்லைக்குள் பிற மாநிலத்தில் இருந்து வருபவர்கள் வருபவர்கள் இபதிவு செய்திருந்தால் போதும் என்று மட்டும் இருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் கோவையில் கிட்டத்தட்ட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதாக பொதுமக்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version