தமிழ்நாடு

கொரோனா அச்சம்: தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடு விதிப்பு

Published

on

தமிழகத்தில் கிடுகிடுவென பரவி வரும் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 10 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழக கோயில்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் கோயிலுக்குள் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கும், கோயில் மண்டபங்களுக்குள் நடைபெறும் திருமணங்களில் 50 பேருக்கும் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்திற்குள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவேளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி திருமணங்களை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் நடைபெறும் பூஜைகளில் கோயில் நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு முக்கிய அறிவிப்பைத் தெரிவித்துள்ளது தமிழக அரசு.

இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக, ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு 1 லட்சத்திற்கும் அதிகமாகவும், தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு 6 ஆயிரத்துக்கு அதிகமாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version