தமிழ்நாடு

தமிழகத்தில் நவம்பர் 10 முதல் எதற்கெல்லாம் அனுமதி மற்றும் அனுமதியில்லை?

Published

on

கோவிட்-19 ஊரடங்கிற்கு தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தமிழக அரசு பல்வேறு புதிய தளர்வுகள் கூடிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப தமிழகத்தில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொழுது போக்கு பூங்காங்க்கள், உயிரியல் பூங்காக்கள் நவம்பர் 10 முதல் திறக்கப்படும். ஆனால் தண்ணீர் விளையாட்டு, நீச்சல் குளம் போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது.

அரசியல், மதம், பொழுதுபோக்கு உள்ளிட்ட கூட்டங்களுக்கு நவம்பர் 16-ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கூட்டங்களில் 100 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் 16-ம் தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்பு வரையில் பள்ளிகள் இயங்கலாம். கல்லூரிகள் செயல்படலாம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

https://seithichurul.com/news/tamilnadu/tn-cinema-theatres-going-to-reopen-from-november-10-after-covid-19-lockdown/26861/

Trending

Exit mobile version