இந்தியா

அதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன? கட்டணம் எவ்வளவு?

Published

on

இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (UIDAI), புதிய அம்சங்களுடன் பிளாஸ்டிக் ஆதார் கார்டு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னாதாக தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் பேப்பர் ஆதார் கார்டுகளை, பிளாஸ்டிக் கார்டுகளில் அச்சிடப்பட்டு வழங்கி வந்தன. அதை பார்த்த சில தனியார் கணினி மையங்களும் பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை அச்சிட்டு வழங்கி வந்தன. இதை பார்த்த இந்திய தனிநபர் அடையாள ஆணையம் இப்படி பிளாஸ்டிக் ஆதார் கார்டுகள் அச்சிடக் கூடாது. அவை செல்லாது என்று அறிவித்தது.

இந்நிலையில் ஏடிஎம் டெபிட் கார்டுகள் போன்று பிளாஸ்டிக் ஆதார் கார்டுகள் வழங்கபப்டும் என்று இந்திய தனிநபர் அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.

எனவே, அதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் ஆதார் கார்டு சிறப்பம்சங்கள் என்னென்ன? கட்டணம் எவ்வளவு? என்று விளக்கமாக பார்க்கலாம்.

1) நல்ல தரத்துடன் அச்சிடப்ப்பட்டு, லேமினேஷன் செய்யப்பட்டு இருக்கும்.
2) முன்பு இருந்த பேப்பர் ஆதார் கார்டுடன் ஒப்பிடும் போது, பிளாஸ்டிக் ஆதார் கார்டுகள் கொண்டு செல்ல எளிமையானது.
3) புதிய பிளாஸ்டிக் ஆதார் கார்டில் ஹாலோகிராம், கில்லோசே பேட்டர்ன், கோஸ்ட் இமேஜ் மற்றும் மைக்ரோடெக்ஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.
4) பிலாஸ்டிக் ஆதார் கார்டுகள் எந்த தட்ப வெட்ப சூழலிலும் எதுவும் ஆகாது. தண்ணிர் பட்டாலும் ஒன்றும் ஆகாது.
5) QR குறியீடு ஸ்கான் செய்வதிலும் சிக்கல் இருக்காது.
6) கார்டு எப்போது வழங்கப்பட்டது, எப்போது அச்சிடப்பட்டது என்ற விவரங்கள் இதில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
7) ஆதார் லோகோ சற்று தப்பமாக வெளியில் வருவது போல இருக்கும்.

பிளாஸ்டிக் ஆதார் கார்டை ஆர்டர் செய்ய, இந்திய தனிநபர்கள் அடையாள ஆணயம் தளத்தில் (Order Aadhaar Card) புதிய தெரிவு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. கட்டணம் 50 ரூபாய் செலுத்த வேண்டும். அதில் ஜிஎஸ்டியும் அடங்கும். எப்போது கார்டு டெலிவரி ஆகும் என்ற ஸ்டேட்டஸ் சேவையும் வழங்கப்படும்.

பிளாஸ்டிக் கார்டு பெற விண்ணப்பித்தால், 5 நாட்களில் அஞ்சல் அலுவலகம் மூலம் டெலிவரி செய்யப்படும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version