தமிழ்நாடு

சசிகலாவுக்கு சிக்கல் மேல் சிக்கல்: புது சிக்கல் என்ன தெரியுமா?

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில்தான் சிறையிலிருந்து வெளியே வந்த நிலையில் அவர் அதிமுகவை கைப்பற்றுவார், அதிமுகவினருக்கு சிக்கலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கே சிக்கல் மேல் சிக்கல் வந்துள்ளது தெரியவந்துள்ளது.

சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை வந்த அன்று அவரை வரவேற்க நூற்றுக்கணக்கான வாகனங்கள் உடன் வந்தன. அந்த வாகனங்களில் ஒரு சில வாகனங்கள் ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது என்று தெரிய வந்தது. ஜெயலலிதா தனது வேட்பு மனுவில் தனக்கு சொந்தம் என குறிப்பிடப்பட்டிருந்த வாகனங்களில் சில சசிகலாவை வரவேற்க சென்றது என்று கூறப்படுகிறது.

மோட்டார் வாகனச் சட்டப்படி ஒருவர் இறந்த பிறகு அவர் பெயரில் உள்ள வாகனங்களை மூன்று மாதத்திற்குள் அவரது வாரிசுதாரர் பெயரில் மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஜெயலலிதா இறந்து மூன்று வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் அவருடைய வாகனங்கள் பெயர் மாற்றம் செய்யப்படாமல் உள்ளன. இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்படாமல் இருக்கும் வாகனங்களை சசிகலாவின் ஆதரவாளர்கள் பயன்படுத்தியதால் போக்குவரத்து துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஜெயா பப்ளிகேஷன் என்ற பெயரில் இருக்கும் வாகனங்களை அந்த பப்ளிகேஷனின் பங்குதாரர் என்ற வகையில் சசிகலா பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றார்கள். இருப்பினும் அதிமுகவை கைப்பற்றப் போவதாக கூறிக் கொண்டிருக்கும் சசிகலா தரப்பினர் வாகன விஷயத்தில் சிக்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Trending

Exit mobile version