வணிகம்

விவசாயிகள் போராட்டத்தால் ஜியோவிற்கு வந்த புதிய சிக்கல்!

Published

on

டெல்லியில் வேளான் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்படி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் நெறியில்லாத வகையில் பிரச்சாரங்களைச் செய்து, ஜியோ வாடிக்கையாளர்களைத் திசை திருப்பி வருவதாக வீ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மீது ரிலையன்ஸ் டிராயிடம் புகார் தெரிவித்துள்ளது.

டிராய்க்கு ஜியோ அளித்த புகாரில், புதிய வேளான் சட்டங்களால் ரிலையன்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களுக்குத் தான் லாபம். எனவே வீ மற்றும் ஏர்டெல் சிம் கார்டுகளை பயன்படுத்துங்கள் என்று பிரச்சாரம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் மற்றும் வீ நிறுவனங்கள் ஜியோவின் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் வேளான் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், வட மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் பங்குகளை முடக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version