தமிழ்நாடு

முதல்வர் அறிமுகம் செய்த ‘காவல் உதவி’ செயலி: என்னென்ன சிறப்பம்சங்கள்!

Published

on

இக்கட்டான நேரத்தில் காவல்துறையை அழைக்க ஏற்கனவே காவலன் என்ற செயலி இருக்கும் நிலையில் தற்போது புதிதாக காவல் உதவி என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அவசர காலங்களில் பெண்கள் உடனடியாக புகார் அளிக்க உருவாக்கப்பட்டுள்ள இந்த காவல் உதவி என்ற செயலியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

60க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப் பட்டுள்ள இந்த செயலி மூலம் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் இருந்தும் புகார் அளிக்கலாம்.

புகைப்படங்கள் மூலமாகவும் சிறிய அளவிலான வீடியோ மூலமாக முதலில் புகார் அளிக்கலாம். காவல் நிலையங்களின் இருப்பிடம், நேரடி அழைப்பு எண், கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி விபரம் உள்ளிட்டவை இந்த செயலில் இருக்கும்.

லொகேஷன் பரிமாறும் வசதி, போக்குவரத்து விதிமீறலின் அபராதம் செலுத்தும் வசதி உள்ளிட்ட இந்த காவல் உதவி செயலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version