உலகம்

ஆப்கானிஸ்தானில் புதிய பிரதமர்: அமெரிக்காவால் தேடப்பட்டவர் உள்துறை அமைச்சர்!

Published

on

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக தாலிபான்கள் மற்றும் ஆப்கன் அரசுக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது என்பதும் ஆப்கன் அரசுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டது. சமீபத்தில் அமெரிக்காவின் கடைசி வீரரும் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க படைகளின் எண்ணிக்கை குறையக் குறைய தாலிபான்களின் கை ஓங்கியது என்பதும், ஒரு கட்டத்தில் தலைநகர் காபூலையே தாலிபான்கள் கைப்பற்றி அதனை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை விரைவில் அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளியானது. இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக முல்லா ஹஸன் அகுந்த் என்பவர் பதவி ஏற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய அரசின் அமைச்சரவை பட்டியலையும் தாலிபான் அமைப்பு வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பாக அமெரிக்காவால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த சர்வதேச பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்ட அப்துல் கானி என்பவர் உள்துறை அமைச்சராக தாலிபான்கள் அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாலிபான்களின் இந்த அறிவிப்பு அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலகிற்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்கள் இன்று அல்லது நாளை பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version