பர்சனல் ஃபினான்ஸ்

பெண்களுக்கு 7.5% வட்டி விகிதத்தில் சிறு சேமிப்பு திட்டம்.. இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே முந்துங்கள்!

Published

on

பட்ஜெட் 2023-2024 தாக்கல் செய்த நிதியமைச்சர் பெண்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும், 75 ஆண்டுகால சுதந்திரத்தின் நினைவாக அசாதிக் கா அம்ரித் மஹோத்சவ்வின் ஒரு அங்கமாகப் பெண்களுக்கு 7.5% வட்டி விகிதத்தில் மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம் என்ற சிறு சேமிப்பு திட்டம் ஒன்றை இரண்டு ஆண்டுகளுக்கு அறிவித்துள்ளார்.

மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம் என அழைக்கப்படும் இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் 2025 மார்ச் மாதம் வரை பெண்கள் பணத்தை முதலீடு செய்யலாம்.

அதிகபட்சமாக இந்த திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே முதலீடு செய்ய முடியும். பெண்கள் அல்லது பெண் குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் இதில் முதலீடு செய்து 2 ஆண்டுகளுக்கு 7.5 சதவிகித வட்டி விகித லாபத்தைப் பெறலாம்.

இந்த திட்டத்தில் அஞ்சல் அலுவலகம் மூலம் பெண்களால் முதலீடு செய்ய முடியும்.

இது ஒரு முறை திட்டம் என்பதால் இந்த இரண்டு ஆண்டுகளுக்கு (2025 மார்ச் வரையில்) மட்டுமே கிடைக்கும்.

மூத்த குடிமக்கள்

சிறு சேமிப்பு திட்டமான முத்த குடிமக்களுக்கான சேமிப்பு பத்திரத்தில் 15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம் என்று இருந்த வரம்பை 30 லட்சமாகவும் உயர்த்தி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாத வருமானம் திட்டம்

அஞ்சல் அலுவலகத்தில் வழங்கப்படும் மாதம் வருமான திட்டத்தில் தனிநபர்கள் 4.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம் என்று இருந்த வரம்பை 9 லட்சமாகவும், ஜாயிண்ட் கணக்குகள் வைத்துள்ளவர்கள் 9 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம் என்பதை 15 லட்சம் ரூபாயாகவும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் உயர்த்தி அறிவித்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version