தமிழ்நாடு

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புதுச்சிறப்பு.. என்னன்னு பாருங்க!

Published

on

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.சென்னை புறநகர் பேருந்து நிலையம் (Chennai Mofussil Bus Terminus) என்ற பெயர் நீக்கப்பட்டது.

இதற்கு பதிலாக புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஓ 9001:2000 தரச் சான்றிதல் பெற்றது இது. இது  37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டம் ஆகும். 1999ல் இந்த திட்டத்திற்கு கருணாநிதி இடம் ஒதுக்கினார்.

அதன்பின் 2002ல் இந்த திட்டத்திற்கு ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். 2002 நவம்பரில் இந்த இந்த பேருந்து நிலையை கட்டுமான பணிகள் துவங்கியது. பணிகள் நிறைவு பெற்று சென்னை புறநகர் பேருந்து நிலையம் (Chennai Mofussil Bus Terminus) என்ற பெயருடன் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version