தொழில்நுட்பம்

புதிய மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ அறிமுகம்.!

Published

on

அண்மையில் இந்திய சந்தையில் வெளியான ஆப்பிள் ஐபாட் ப்ரோ மற்றும் சாம்சங் இன் சாம்சங் கேலக்ஸி டேப் 4 உடன் போட்டி போட மைக்ரோசாப்ட் நிறுவனமும் தற்பொழுது களத்தில் இறங்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ 10′ இன்ச் டிஸ்பிளேயுடன் 2 இன் ஒன் சாதனமாக தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ பிளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ, 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.38,599 என்ற விலையில் முன்பதிவு செய்யப்படுகிறது. அதேபோல் சர்பேஸ் கோ வின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.50,999 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்குமென்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இத்துடன் மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ-வின் சர்பேஸ் கோ டைப் கவர் (பிளாக்) ரூ.8,699-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் மைக்ரோசாப்ட் லோகோவுடன் கிடைக்கும் சர்பேஸ் கோ டைப் கவர் (சில்வர்) ரூ.11,799 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ, சர்பேஸ் பென்னுடன் “பிக்சல் சென்ஸ்” தொழில்நுட்பத்துடன் கூடிய 4096 அழுத்த சென்சிட்டிவிட்டியுடன் 3:2 விகித உயர் ரெசொலூஷன் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ விபரக்குறிப்பு: 

– 10′ இன்ச் முழு எச்.டி டிஸ்பிளே

– சர்பேஸ் பென்

– பிக்சல் சென்ஸ் தொழில்நுட்பம்

– 7ஆம் ஜெனெரஷன் இன்டெல் பென்டியம் கோல்ட் ப்ராஸஸர் 4415Y

– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3

– 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்

– 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்

– மைக்ரோ எஸ்.டி ஸ்லாட்

– 5 மெகா பிக்சல் எச்.டி முன்பக்க கேமரா

– 8 மெகா பிக்சல் எச்.டி பின்பக்க கேமரா

– யு.எஸ்.பி – சி போர்ட்

– டூயல் மைக்ரோபோன்

– 9 மணி நேர பேட்டரி பயன்பாடு

 

seithichurul

Trending

Exit mobile version