தமிழ்நாடு

நவம்பர் 13ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்

Published

on

சென்னையில் இருந்து 850 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டு இருப்பதாகவும் அது நாளை கரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்ககடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை சென்னை மற்றும் கடலூர் இடையே கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக சென்னை, கடலூர் மற்றும் தெற்கு ஆந்திர அவரை மேகக் கூட்டங்கள் திரண்டு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி நவம்பர் 13ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 15 இல் தமிழக கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதன் காரணமாக இன்னும் ஒரு வாரத்திற்கு தொடர்ச்சியாக கன மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது வரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 30 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மதியம் வரை அதிக மழை நீடிக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version