தமிழ்நாடு

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ஊரடங்கு தளர்வுகள்.. எதுவெல்லாம் இயங்கும்? எதுவெல்லாம் இயங்காது?

Published

on

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் இன்று முதல் பல முக்கிய ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருவதாகத் தமிழக அரசு சனிக்கிழமை தெரிவித்து இருந்தது. அதன் படி ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதன்படி பின் வரும் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் சிலவற்றுக்கு மட்டும் தடை உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

மே 11 முதல் எதுவெல்லாம் இயங்கும்?

  1. டீக்கடைகள் – பார்சல் மட்டும்
  2. பேக்கரிகள் – பார்சல் மட்டும்
  3. உணவகங்கள் – பார்சல் மட்டும்
  4. பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்
  5. கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள்
  6. சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்
  7. மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  8. மொபைல் போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  9. வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்
  10. மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  11. கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  12. சிறிய நகைக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை)
  13. சிறிய ஜவுளிக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை – ஊரக பகுதிகளில் மட்டும்)
  14. மிக்ஸி,கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்
  15. டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்
  16. பெட்டி கடைகள்
  17. பர்னிச்சர் கடைகள்
  18. சாலையோர தள்ளுவண்டிக் கடைகள்
  19. உலர் சலவையகங்கள்
  20. கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்
  21. லாரி புக்கிங் சர்வீஸ்
  22. ஜெராக்ஸ் கடைகள்
  23. இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்
  24. இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்
  25. நாட்டு மருந்து விற்பனை கடைகள்
  26. விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்
  27. டைல்ஸ் கடைகள்
  28. எலக்ட்ரிக்கல் கடைகள்
  29. ஆட்டோமொபைல் உதிடி பாகங்கள் விற்பனை கடைகள்
  30. நர்சர் கார்டன்கள்
  31. மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள்
  32. மரம் அறுக்கும் கடைகள்

மே 11 முதல் எதுவெல்லாம் இயங்காது?

  1. முடி திருத்தும் நிலையங்கள் – சலூன்கள்
  2. ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்

ஊரடங்கு தளர்வின் போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள் மற்றும் கடைகள் தொடர்ந்து இயங்கும். மேலும் கொரோனா நோய்த் தொற்று தன்மையைப் பொறுத்து வருங்காலங்களில் பல்வேறு பணிகளுக்கு, கடைகளுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்படும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கடைகளில் உரிமையாளர்கள், குளிர்சாதன வசதி இருந்தால் அதை இயக்காமல், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனி நபர் இடைவெளியினை பின்பற்ற அறிவுறுத்துவதோடு, கிருனிநாசிகள் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களைக் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: இந்த ஊரடங்கு தளர்வுகள் கொரோனா பதிப்பு அதிகம் உள்ள சீல் செய்யப்பட்ட பகுதிகளுக்கு பொருந்தாது.

seithichurul

Trending

Exit mobile version