தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம்: மக்கள் நல்வாழ்த்துறை தகவல்!

Published

on

நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது என்பதும் ஆட்சிக்கு வந்த பின்னரும் நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீட்தேர்வு பாதிப்பு குறித்து அறியும் வகையில் தமிழக அரசு ஏகே ராஜன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது என்றும் அந்த குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கையின் அடிப்படையில் சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் இயற்றவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும், மருத்துவக் கல்வி கொள்கையில் பாகுபாடு இருப்பதால் மாணவர்கள் சமூக நீதி உறுதி செய்யப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.

நீட்தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றிய உடன் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்று கூறப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version