இந்தியா

அக்டோபர் 1 முதல் வேலை நேரம் அதிகரிக்கும், கைக்கு வரும் சம்பளம் குறையும்.. ஊழியர்கள் அதிர்ச்சி!

Published

on

ஒன்றிய அரசு அக்டோபர் 1-ம் தேதி முதல் தொழிலாளர் சட்டத்தில் புதிய திருத்தங்களை அமலுக்குக் கொண்டு வருகிறது.

புதிய தொழிலாளர் சட்டத் திருத்தத்தின் கீழ், ஊழியர்கள் பணிபுரியும் நேரம் 9 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரம் வரை நிறுவனங்கள் உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

மேலும் அடிப்படை சம்பளத்தை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். இப்போது பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் பெரும் பகுதி சம்பளத்தை படிகளாக வழங்கி வருகின்றன. அவற்றைக் குறைத்து அடிப்படை சம்பளத்தை உயர்த்தினால் பிஎப்-க்கு (வருங்கால வைப்பு நிதி) அதிகம் பிடித்தம் செய்யப்படும்.

ஓய்வுக் காலத்திற்குத் திட்டமிட இந்த புதிய விதி நல்லது என்றாலும், ஊழியர்களின் கைக்கு வரும் மாத சம்பளம் குறையும். இதுபோன்ற மாத சம்பளத்தில் மேலும் சில திருத்தங்களும் செய்யப்பட உள்ளது.

புதிய திருத்தத்தில் 15 நிமிடம் முதல் 30 நிமிடங்களுக்குள் கூடுதலாக வேலை பார்த்தால் அது ஓவர் டைம் என கருதப்படும். முன்பு 30 நிமிடங்களுக்கு மேல் வேலை பார்த்தால் மட்டும்தான் அது ஓவர் டைம் என எடுத்துக்கொள்ளப்படும்.

மேலும் இந்த வரைவு சட்டத்தில் ஊழியர்கள் தொடர்ந்து 5 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். 5 மணி நேரத்துக்கு ஒரு முறை 30 நிமிடங்கள் இடைவேளை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version