Connect with us

பர்சனல் ஃபினான்ஸ்

வருமான வரி விலக்கு அறிவிப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னதில் இவற்றை நீங்கள் கவனித்தீர்களா?

Published

on

பட்ஜெட் 2023-2024ஐ புதன்கிழமை தாக்கல் செய்த நிதியமைச்சர், எப்போதும் போலக் கடைசியாக வருமான வரி விலக்கு குறித்த அறிவித்ததுடன் தனது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.

பட்ஜெட் உரையில் வருமான வரி விலக்கு அறிவிப்பு கடைசியாக வந்தாலும், இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள மாத சம்பள தாரர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருப்பது இதைத்தான். அப்படி பட்ஜெட் 2023-2024ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனிநபர் வருமான வரி குறித்து வெளியிட்ட அறிவிப்பு குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

முதலில் வரி தள்ளுபடி (ரிபேட்)

இப்போது தனிநபர் வருமான வரி வரம்பில் பழைய அல்லது புதிய வருமான வரி முறை என இரண்டிலும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் வரி தள்ளுபடி(ரிபேட்) கிடைக்கும். இப்போது இந்த தள்ளுபடி வரம்பை புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டும் 7 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளனர். அதன்படி, புதிய வருமான வரி முறையைப் பின்பற்றும் போது ஆண்டு வருமான 7 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும் போது வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது புதிய வருமான வரி முறையைப் பலர் பின்பற்ற வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பாகும்.

வருமான வரி வரம்புகள் எண்ணிக்கை குறைப்பு

2020-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் அப்போது புதிய வருமான வரி முறையை அறிமுகம் செய்தார். அதன்படி புதிய வருமான வரி முறையைப் பயன்படுத்துபவர்களுக்கு 6 வருமான வரி வரம்புகள் இருந்தன. அது இப்போது 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே 0-3 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. 3-6 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 5 சதவிகித வரி செலுத்த வேண்டும். அதுவும் இப்போது 7 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி உள்ளதால் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.

ஆண்டுக்கு 6 முதல் 9 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் 10 சதவிகிதம் வருமான வரி செலுத்த வேண்டும். 7 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி போக 2 லட்சம் ரூபாய்க்கு 10 சதவிகிதம் என 20 ஆயிரம் ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டி வரும். இதுவே 9 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் இருந்தால் 15 சதவிகிதம் வருமான வரி செலுத்த வேண்டும். 12 முதல் 15 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானமாக இருந்தால் 20 சதவிகிதம் வருமான வரி செலுத்த வேண்டும். 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஆண்டும் வருமானம் இருந்தால் 30 சதவிகிதம் வருமான வரியாகச் செலுத்த வேண்டும்.

புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுபவர்களுக்கு பெரும் விலக்கு

ரூ.9 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் அதிகபட்சம் 45 ஆயிரம் ரூபாய் மட்டுமே வரியாகச் செலுத்த வேண்டும். இது அவரது வருமானத்தில் 5 சதவிகிதம் மட்டுமே. அதாவது முன்பு இருந்ததை விட 35 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு 60,000 ரூபாய் வரியாகச் செலுத்த வேண்டி இருந்தது. அதே போல ஆண்டு வருமானம் 15 லட்சம் உள்ளவர்களுக்கு 1,87,500 ரூபாயிலிருந்து 1.5 லட்சம் ரூபாயாக வரி செலுத்தினால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன்

ஆண்டு வருமானம் 15.5 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக உள்ளவர்கள் ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் கீழ் ரூ.52,000 வரி விலக்கு பெற முடியும்.

அதிக வரி வசூலிக்கும் நாடு

இந்தியாவில் அதிகபட்சமாக 42.74 சதவிகிதமாக உள்ள தனிநபர் வருமான வரியை, 37 சதவிகிதமாக இருந்த சர்சார்ஜை 25 சதவிகிதமாகக் குறைப்பதன் மூலம் 39 சதவிகிதமாகக் குறிக்கப்பட்டுள்ளது.

விடுப்பு சம்பளம்

அரசு சாரா நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் விடுப்பு எடுக்காமல் வேலை செய்து ஓய்வு பெறும் போது, அடிப்படை ஊதியமாக 30 ஆயிரம் ரூபாயாக இருந்தால், அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய் வரை அதனைப் பணமாகப் பெறலாம். இந்த முறை 2002-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்த முறையை அரசு ஊழியர்களுக்கு 25 லட்சம் ரூபாயாக வழங்குவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

முதன்மை வரி தாக்கல் செய்யும் முறை

மேலும் புதிய வரி தாக்கல் செய்யும் முறையை முதன்மையாகவும், பழைய வரி முறையைத் தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்வது போலவும் மாற்றப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

எவ்வளவு வருவாய் இழப்பு?

மேலே கூறியுள்ள அறிவிப்புகளால் அரசுக்கு 35,000 கோடி ரூபாய் வருவாய் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டால் விலை உயரும் பொருட்கள் என்னென்ன? குறையும் பொருட்கள் என்னென்ன?

author avatar
seithichurul
இந்தியா1 மணி நேரம் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா2 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா