தொழில்நுட்பம்

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்: வேற லெவலில் ஒப்போவின் புதிய மாடல்!

Published

on

செல்போன் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஓப்போ நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மொபைல் போன்கள் பரிணாம வளர்ச்சியைப் பெற்று வரும் நிலையில் அடுத்த பரிணாம வளர்ச்சியாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. ஏற்கனவே ஒரு சில மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் வெளிவந்தாலும் அந்த மாடல்கள் வாடிக்கையாளர்களை கவரவில்லை.

ஆனால் தற்போது ஓப்போ நிறுவனம் வெளியிட்டுள்ள மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மிகவும் ஸ்மார்ட்டாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஓப்போ ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

7.10 இன்ச் பிரைமரி டிஸ்பிளே
குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 புராஸசர்
32 மெகா பிக்சல் ஃபிராண்ட் கேமரா
50MP + 16MP + 13MP என 3 ரியர் கேமராக்கள்
8 ஜிபி ரேம்
128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
4500 mAh பேட்டரி
ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
டியூயல் ஸ்பீக்கர் சிஸ்டம்
5.49 இன்ச் வெளிப்புற டிஸ்பிளே

இதன் சந்தை விலை மற்றும் விற்பனை எப்போது என்பது குறித்த தகவலை விரைவில் ஓப்போ நிறுவனம் அறிவிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version