இந்தியா

4 சக்கர வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Published

on

ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2017-ம் ஆண்டு முதல் விற்பனை செய்யும் அனைத்து 4 சக்கர வாகனங்களும் பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்டு இருந்தது. எனவே புதிதாக வாங்கும் 4 சக்கர வாகனங்களும் அனைத்தும் இப்போது பாஸ்டேக் உடனே வருகிறன.

ஆனால், 2017-ம் ஆண்டுக்கு முன்பு வாங்கிய 4 சக்கர வாகனங்கள் பாஸ்டேக் இல்லாமல் டோல்வேக்களில் கட்டணம் செலுத்திச் சென்று வருகின்றன. விருப்பம் உள்ள வாகன உரிமையாளர்கள் பாஸ்டேக் வாங்கியுள்ளனர்.

அப்படி பாஸ்டேக் வாங்காத கார் உரிமையாளர்கள் இப்போது ஜனவரி-1-ம் தேதிக்குள் பாஸ்டேக் வாங்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இப்படி அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் பொருத்தும் போது, டோல்வேக்களில் 100 சதவீத வாகனங்களும் டிஜிட்டல் வழியில் பணம் செலுத்தி எளிதாகக் கடந்து செல்லலாம். இதனால் டோல்வேக்களில் ஏற்படும் டிராப்பிக் குறையும்.

https://seithichurul.com/news/india/fastag-meaning-in-tamil-fastag-details-in-tamil-fastag-benefits-in-tamil-how-to-buy-fastag-how-to-recharge-fastag-how-to-link-bank-account-with-fastag-fastag-charges/18736/

seithichurul

Trending

Exit mobile version