இந்தியா

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேறியது தேர்தல் சீர்திருத்த மசோதா!

Published

on

பாராளுமன்றத்தில் இன்று தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி சற்று முன்னர் தேர்தல் சீர்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தேர்தல் சீர்திருத்த சட்ட மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் போது எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்தனர். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வழி செய்யும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட உடன் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்வது உள்நோக்கம் கொண்டது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்த இந்த மசோதா நிறைவேறியது தேர்தல் திருத்த மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் செய்யாமல் மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version