தமிழ்நாடு

இன்று புதிய காற்றழுத்தம், 2 நாட்களில் காற்றழுத்த மண்டலம்: வானிலை எச்சரிக்கை!

Published

on

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அந்த காற்றழுத்த தாழ்வு இன்னும் இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்க கடலில் கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாக காற்றழுத்த தாழ்வு உருவாகி அது மண்டலமாக உருமாறி கன மழையை கொடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் டிசம்பர் 3ஆம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக் கூடும் என்றும் இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அனைத்து பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வரும் மூன்றாம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version