உலகம்

உலகை அச்சுறுத்த வரும் அடுத்த வைரஸ்… கொரோனாவை விட கொடியதாம்!

Published

on

கொரோனா வைரஸை விட கொடிய வைரஸ் ஒன்று புதிதாக உலக மக்களை அச்சுறுத்த உள்ளதாக அறிவியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

உலகில் முதன் முதலாக எபோலா வைரஸ் தாக்குதல் ஏற்பட்ட போது அதை முதலாவதாகக் கண்டறிந்து எச்சரித்தார் காங்கோவைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ஜீன் ஜாக்கஸ் முயம்பி டம்ஃபம். இவர் தான் தற்போது புது வைரஸ் ஒன்று உலக மக்களை அச்சுறுத்த வர உள்ளதாக எச்சரிக்கை மணி அடித்துள்ளார். உலகில் அடுத்தடுத்து புதுப்புது வைரஸ்கள் மக்களைத் தாக்க வர உள்ளன. மனித இனத்துக்கே சவால் விடுக்கும் வகையில் இவைகளின் தாக்குதல் இருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

அந்தப் புதிய வைரஸை அறிவியல் மருத்துவாளர்கள் ‘Disease X’ என அழைக்கின்றனர். சமீபத்தில் காங்கோ நாட்டில் ஒரு பெண்ணுக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டதாம். அது முதலில் எபோலா எனக் கண்டறியப்பட்டாலும் அதை விட கொடூரமானதாக இருந்ததாம். ஆக, எபோலாவின் தன்மை உடன் கொரோனாவை விட கொடியதாக இப்புதிய ‘Disease X’ வைரஸ் இருக்கும் எனக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

WHO என்னும் உலக சுகாதார மையம் ‘Disease X’ மனிதர்களைத் தாக்குதவதற்கும் அது சர்வதேச பாதிப்பை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளது. இதுகுறித்த ஆய்வை தொடர்ந்து சர்வதேச மருத்துவ ஆய்வாளர்கள் துரித கதியில் மேற்கொண்டு வருகின்றனர். இத்தனைக் காலம் மிருகங்களில் மட்டுமே காணப்பட்டு வந்த பல வகையான கொரோனா வைரஸ்கள் இனி மனிதர்களுக்குத் தாவும் அபாயம் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ரேபிஸ், மஞ்சள் காய்ச்சல் ஆகியன மிருகங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ்கள் இதேபோல் தான் இனி வரும் காலங்களிலும் ஏதோ ஒரு வைரஸ் மிருகங்களிடம் இருந்து மனிதர்களைத் தாக்கும் எனக் கூறப்படுகிறது. பெரும்பாலும் அடுத்து வர உள்ளதாகக் கூறப்படும் வைரஸ் ஆப்பிரிக்கா கண்டம் பகுதியில் இருந்து தான் பரவும் எனக் கூறப்படுகிறது. ஆப்ரிக்காவில் உருவானால் மற்ற உலக நாடுகளுக்குப் பரவும் முன்னர் தடுத்து விடலாம் என்றும் மருத்துவ ஆய்வாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் சுமார் 85 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளதாகவும் 1.8 மில்லியனுக்கு அதிகமானோர் இந்த கொரோனா வைரஸ்-க்குப் பலி ஆனதாகவும் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

seithichurul

Trending

Exit mobile version