Connect with us

ஆரோக்கியம்

பரவும் புதிய வகை கொரோனா – மருத்துவர் ராகவேந்திரன் ‘எக்ஸ்க்ளூசிவ்’ பேட்டி

Published

on

New covid strain

எதிர்வரும் புதிய ஆண்டான 2021, மக்களுக்கு நன்மை ஏதும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; 2020 போல் வச்சு செய்துவிட வேண்டாம் என்பதே ஒட்டுமொத்த உலகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கொரோனா எனும் கொடூரன் எண்ணற்ற உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்க, தற்போது அதன் புது வடிவ வைரஸ் இங்கிலாந்தில் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக, லண்டனில் இருந்து சென்னை வந்த 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், மக்கள் மீண்டும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார், ஆயுர்வேதா மருத்துவர் ராகவேந்திரன். இவர் கோவை எஸ்.ஜி. ஆயுர்வேதா மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றுகிறார்.

இதுகுறித்து நமது செய்தி சுருள் தளம் சார்பாக அவருடன் உரையாடிய போது, பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக பதில் அளித்துள்ளார்.

மஞ்சள் மற்றும் கல் உப்பு கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் தொண்டை கொப்பளிக்கவும்.

பரவும் புதிய வகை கொரோனா – தற்காத்துக் கொள்வது எப்படி?

தினமும் மூக்கு துவாரத்தில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் தடவவும்.

கொதிக்கும் தண்ணீரில் துளசி, புதினா, மஞ்சள், கற்பூரம் ஆகியவை போட்டு தினமும் ஆவி பிடிக்கவும்.

தொண்டையை எப்பொழுதும் ஈரமாகவே வைத்து கொள்ளவும். இடையிடையே சிறிது வெந்நீர் குடிக்கவும்.

தினமும் துளசி, கற்பூரவள்ளி, திருநீர் பச்சிலை, மஞ்சள், இஞ்சி சேர்த்த மூலிகை தேநீருடன் சிறிதளவு தேன் கலந்து பருகுவது மிகவும் பலனளிக்கும்.

உணவில் ஜீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள், திப்பிலி போன்ற மருத்துவ குணம் மிக்க பொருட்களை சேர்க்கவும்.

தினமும் சிறிய அளவிலாவது உடற்பயிற்சி செய்வது மிக அவசியம்.

யோகா பயிற்சிகள், பிராணாயாமம் என்ற மூச்சு பயிற்சி தினமும் மேற்கொள்வது மிகவும் நல்லது.

வீட்டினுள்ளே சாம்பிராணி, மஞ்சள் பொடி, காய்ந்த வேப்பிலை, கடுகு, பெருங்காயம் கொண்டு புகை போடவும்.

இந்திய அரசாங்கம் ஆயுஷ் அமைச்சகத்தின் ஆலோசனைப்படி கீழ்க்காணும் ஆயுர்வேத மருந்துகளை உடல் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள உபயோகிக்கலாம்:
1. இந்துகாந்தம் கஷாயம் / தசமூலகடுத்ரையம் கஷாயம் / வ்யாகிரியாதி கஷாயம் 15மிலி வெதுவெதுப்பான தண்ணீர் 60மிலியுடன் கலந்து காலையும் மாலையும் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

2. அகஸ்திய ரசாயனம் / ச்யவனப்பிராசம் / கூஷ்மாண்ட ரசாயனம் போன்ற லேகியங்களை 1 ஸ்பூன் இரவு தூங்கும் போது சாப்பிடலாம்.

3. ஆயுஷ் குடிநீர்: 3 கிராம் பொடியை 150மிலி கொதித்த தண்ணீரில் 5நிமிடம் ஊற வைத்து வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து தேநீர் போல் அருந்தவும்.

4. ரக்ஷக் பிளஸ் மாத்திரை: ஒரு மாத்திரை காலை உணவுக்கு பின் சாப்பிடவும்.

5. ரக்ஷோக்ன தூப சூர்ணம்: வீடு முழுவதும் மாலை நேரத்தில் புகை போடவும்.
மேலும் விபரங்களுக்கு மற்றும் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.

விழித்திருப்போம்! தனித்திருப்போம்! வீட்டிலேயே இருப்போம்!

Dr. D Ragavendran BAMS, MD, PGDY

வணிகம்56 நிமிடங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்1 மணி நேரம் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா11 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்12 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா13 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்13 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!